கூட்டணி அரசியல் – ஜனாதிபதிக்கு நாமலின் ஆலோசனை என்ன?

159 0

கூட்டணி அரசியல் குறித்து ஜனாதிபதிக்கு சிறந்த புரிந்துணர்வு அவசியம் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை மாற்றங்கள் மூலம் பிரச்சினைகளிற்கு தீர்வை காணமுடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கூட்டணிகட்சிகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுகட்சிகள் மத்தியில் அமைதியை பேணவேண்டும் என தெரிவித்துள்ள நாமல் ராஜபக்ச  நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் இரண்டு தலைவர்களும் வெவ்வேறு திசையில் சென்றனர் இதனால் நாடு ஸ்திரமின்மைக்குள் தள்ளப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் தீர்மானங்களை எடுக்கும்போது ஜனாதிபதி கூட்டணி கட்சி தலைவர்களுடன் கலந்தாலோசிக்கவேண்டும் என அவருக்கு ஆலோசனை வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சில நாட்களிற்கு முன்னர் இடம்பெற்றதை அமைச்சரவை மாற்றம் என கருதமுடியாது சில துறைகள் மாற்றப்பட்டுள்ளன என தெரிவித்துள்ள நாமல் ராஜபக்ச  அமைச்சரவையி;ல் மாற்றத்தை மேற்கொள்வதற்கான உரிமை ஜனாதிபதிக்குள்ளது அதேவேளை இது குறித்து கூட்டணியில் உள்ள சக கட்சிகளுடன் பேசவேண்டிய கடப்பாடு ஜனாதிபதிக்குள்ளது எனவும் அவர் தெரிவி;த்துள்ளார்.