3 புதிய தூதுவர்கள் ஜனாதிபதியிடம் தமது நற்சான்றிதழ்களை கையளித்தனர்

193 0

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள  இலங்கைக்கான மூன்று தூதுவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (23) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தமது நற்சான்றிதழ் பத்திரங்களை கையளித்தனர்.

சுவிற்சர்லாந்து, ஐரோப்பிய யூனியன் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு  இவ்வாறு புதிய தூதுவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இன்று நற்சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட்ட தூதுவர்களின் பெயர்கள்  பின்வருமாறு :

இலங்கைக்கான  சுவிட்சர்லாந்து தூதுவர் கலாநிதி  சிரி வோல்ப் ( H.E Dr (Ms) Siri Walf –  Ambassador of Switzerland in Colombo)

இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் கலாநிதி அலிரெசா டெல்கொஷ் கார்மென் மோரேனோ  (H.E.Ms.  Carmen Moreno-Ambassador of the European Union  in Colombo)

இலங்கைக்கான ஈரான் இஸ்லாமிய குடியரசின் தூதுவர் கலாநிதி அலிரெசா டெல்கொஷ் ( H.E Dr. Alireza Delkosh – Ambassador of the Islamic Republic of Iran )