எம்.பிக்களின் சம்பளத்தை நிர்ணயிக்க அதிகார சபை

208 0

பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை நிர்ணயம் செய்வதற்கும், அவர்களின் சிறப்புரிமைகளை நிர்ணயம் செய்வதற்கும், நடத்தை விதி மீறல்கள் தொடர்பாக விசாரணை செய்து தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் தனியான அதிகார சபையொன்றை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த அதிகார சபையானது ஓய்வுபெற்ற நீதியரசர்கள் குழுவைக் கொண்டிருக்கும்.

சட்டவிரோதமான முறையில் 8 கோடி ரூபாய் பெறுமதியான தங்கத்தை கொண்டு வந்தமைக்காக அபராதம் விதிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் சம்பவத்தை அடுத்து இந்த அதிகார சபையை ஸ்தாபிப்பது தொடர்பில் அரசாங்கத்தினால் கவனம் செலுத்தப்பட்டது.

பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் மற்றும் ஒழுக்க விதிகளை இந்த அதிகாரசபை பின்பற்றுவதற்கான சந்தர்ப்பத்தை இந்த சட்டம் வழங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.