முல்லைத்தீவு, பாண்டியன் குளம் ஆரம்ப வித்தியாலயத்தில் சமூக சேவையாளர் மு.கார்த்திகேசு குடும்பத்தினரால் அமைக்கப்பட்ட சரஸ்வதியின் திருவுருவச்சிலை இன்று (23) திறந்துவைக்கப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேசத்துக்குட்பட்ட பாண்டியன் குளம் பகுதியில் அமைந்துள்ள பாண்டியன் குளம் ஆரம்ப வித்தியாலயத்துக்கான இந்த சிலையானது, அப்பிரதேசத்தை சேர்ந்த நலன் விரும்பியும் சமூக சேவையாளருமான மு.கார்த்திகேசு குடும்பத்தினரால் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு, இன்று திரை நீக்கப்பட்டு, பாடசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் பாடசாலையின் முதல்வர் மாணிக்கம் ஜெகநாதன், மு.கார்த்திகேசு குடும்பத்தினர், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள் என பலர் கலந்துகொண்டனர்.







