முதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதி அவர்களின் 36ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு- பிரித்தனியா.

232 0

முதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதி அவர்களின் 36ம் ஆண்டு வீரவணக்க நாளும் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும்.

10.10.1987 அன்று யாழ். மாவட்டம் கோப்பாய் பகுதியில் இந்தியப் இராணுவத்தினருடனான நேரடி மோதலில் விழுப்புண்ணடைந்த நிலையில் ‘சயனைட் உட்கொண்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதி உட்பட அதே சம்பவத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 2ம் லெப். கஸ்தூரி, வீரவேங்கை தயா, வீரவேங்கை ரஞ்சினி ஆகிய மாவீரர்களின் 36ம் ஆண்டு வீரவணக்க நாளும் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும் இன்றாகும். பிரித்தனியா தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஒழுங்கமைப்பில் ஹரோ பகுதியில் நிகழ்வானது முன்னெடுக்கப்பட்டது.

நிகழ்வானது பிரித்தனியா தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் மகளிர் துறைப் பொறுப்பாளர் திருமதி தேவராசா தேவதர்சினி அவர்கள் ஏற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்கள் தமிழீழ தேசிய கொடியினை தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் மகளிர் துறை துணைப் பொறுப்பாளர் திருமதி மாதுமை லோகேஷ்வரன் அவர்கள் ஏற்றிவைத்தார்கள் ஈகைசுடரினை மாவீரர் லெப் அழகு இயற்பெயர் கருணானிதி வந்தியதேவன் அவர்களின் சகோதரி திருமதி கங்கேஷ்வரி உதயமூர்த்தி அவர்கள் ஏற்றிவைத்தார்கள் அகவணக்கத்தினை தொடர்ந்து திரு உருவத்திற்க்கான மலர்மாலையினை தாயக விடுதலைப் போரிலே இறுதிவரை களத்தில் நின்ற திருமதி ஆரபி மணியரசன் மற்றும் மற்றும் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் வடமேற்க்குப் பிராந்திய மகளிர் துறைப் பொறுப்பாளர் திருமதி வசந்த குமாரி சிவசூரியன் அவர்களும் இணைந்து அணிவித்தார்கள் தொடர்ந்து நினைவு உரை, கவிதை நடனம் உள்ளடங்கலாக கலை நிகழ்வுகளும் இடம் பெற்றன. தொடர்ந்து ஜேர்மனியில் இடம் பெற்ற 10 நாடுகள் பங்குபற்றிய மாவீரர் உலக கிண்ண உதைபந்தாட்ட போட்டியில் லண்டனில் இருந்து பங்கு பற்றிய வீரர் வீராங்கனைகளுக்கான மதிப்பளிப்பானது நடைபெற்றது. தேசிய கொடி கையெந்தலுடன், மாவீரர் கனவு நனவாக பயணிப்போம் என்ற உறுதியோடு நிகழ்வானது நிறைவடந்தது.