காலி – அஹுங்கலவில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் 3 பேர் காயம் !

173 0

காலி – அஹுங்கல – கல்வெஹர பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

அஹுங்கல பாடசாலைக்கு அருகிலுள்ள உரகஹா வீதியில் குறித்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்களில் பணயித்த 3 பேரே இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இலக்காகியுள்ளனர்.

துப்பாக்கி சூட்டில் காயமடைந்த மூவரும் சிகிச்சைகளுக்காக பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.