சீதுவை பிரதேசத்தில் கொழும்பில் இருந்து நீர்கொழும்பு நோக்கி பயணித்த ரயில் ஒன்றில் நேற்று வெள்ளிக்கிழமை (20) மாலை பெண் ஒருவர் மோதி உயிரிழந்துள்ளார்.
சீதுவை பிரதேசத்தின் லியனகேமுல்லை பகுதியை சேர்ந்த 50 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து தொடர்பில் சீதுவை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

