நெதர்லாந்து திருவள்ளுவர் தமிழ்க்கல்வி-கலைக்கழகத்தின் வெள்ளி விழா 2023

286 0

நெதர்லாந்து திருவள்ளுவர் தமிழ்க்கல்வி-கலைக்கழகம் தனது 25 வருட கல்வி- கலைச்சேவையை நிறைவுசெய்து 15-10-2023 ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணி தொடக்கம் மாலை 7 மணிவரை வெள்ளிவிழவை மிகச்சிறப்பாக கொண்டாடியது.பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், ஆண்டு12 வரை படித்து சித்திபெற்ற மாணவர்ளை மதிப்பளித்ததுடன் , தமிழ்ப்பள்ளி மாணவர்கள் வழங்கிய கலை நிகழ்ச்சிகள் கல்விக்கழகத்தின் வெள்ளிவிழாவை சிறப்பித்ததுடன் எல்லோரது பாராட்டுகளை பெற்றிருந்தது . அனைத்துலகத் தமிழர் கல்விமேம்பாட்டுப் பேரவையின் இணைப்பாளர்கள் எமது அழைப்பை ஏற்று வந்து வெள்ளிவிழாவை சிறப்பித்ததுடன் ,மாணவமணிகள் வெள்ளிவிழா நிகழ்ச்சியினை அமைதியாகவும், அழகாகவும்,ஒற்றுமையாகவும் தொகுத்து வழங்கியது மேலும் வெள்ளிவிழாவை அழகுபடுத்தியிருந்தது மாலை 7 மணியளவில் வெள்ளிவிழா இனிதே நிறைவு பெற்றது.