பொது மக்களை காரணமின்றி கொன்றவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்- சந்திரிக்கா(காணொளி)

351 0

பொது மக்களை காரணமின்றி கொன்றவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

காணாமல் போனோர் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு குறிப்பிட்டார்.

காணாமல் போனவர்கள் கண்டறியப்பட வேண்டும் எனவும், அவர்களின் விபரங்கள் கண்டறியப்பட்டு, நஸ்ட ஈடு வழங்கப்பட வேண்டும், அதற்கான வர்த்தகமானி அறிவித்தலில் ஜனாதிபதி கையொப்பம் இட்டுள்ளார். எனவே இதற்காக இராணுவம் மற்றும் பொலிஸாருக்கு தண்டனை வழங்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.

அத்துடன் இராணுவத்திடமுள்ள பொதுமக்களின் காணிகள் மக்களிடம் மீள கையளிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும் தேசிய நல்லிணக்கத்திற்கும் ஒருமைப்பாட்டிற்குமான அலுவலகத்தினால் இவ் வருடம் வடக்கில் 180 மில்லியன் ரூபா மதிப்பீட்டில் இன நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்காக திட்டங்கள் அமுல்ப்படுத்தப்படவுள்ளதாகவும்,

இத்திட்டத்தில் சுகாதாரம், கல்வி, குடிநீர், கால்வாய் புனரமைப்பு, ஆகிய திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.