நாட்டிலுள்ள சகல மக்களும் சம உரிமையுடன் வாழவிட்டால் எமது நாட்டை முன்னேற்ற முடியாது- சந்திரிக்கா(காணொளி)

352 0

நாட்டிலுள்ள சகல மக்களும் சம உரிமையுடன் வாழவிட்டால் எமது நாட்டை முன்னேற்ற முடியர்து என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

இன்று யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பிரதேசசபையில் தேசிய நல்லிணக்கத்திற்கும் தேசிய ஒருமைப்பாட்டிற்குமான செயலகத்தினால் அமுல்படுத்தப்படுகின்ற பொருளாதார நிகழ்ச்சித்திட்ட ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இனப்பிரச்சனையைத் தீர்த்துக் கொள்வதற்கு தற்போது வாய்ப்பு கிடைத்துள்ளது ஆனால் அதிலும் சவால்களை எதிர்நோக்க வேண்டியிருக்கின்றது என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும் அவருடன் இணைந்த 40 பாராளுமன்ற உறுப்பினர்களும் நாட்டில் இனவாதாத்தினை தூண்டும் வகையில் செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இன்றைய நிகழ்விற்கு பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை.சேனாதிராசா, ஈ.சரவணபவான், வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், வடக்கு மாகாண ஆளுநர் ஜெயினோல்ட் கூரே, சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா உட்பட பலர் கலந்து கொண்டனர்.