குண்டுத்துளைக்காத பேருந்து ஒன்று கொள்வனவு

337 0

கேகாலை சிறைச்சாலையில் இருந்து கைதிகளை நீதிமன்றங்களுக்கு அழைத்துச்செல்வதற்கும் வருவதற்குமாக குண்டுத்துளைக்காத பேருந்து ஒன்று கொள்வனவு செய்யப்படவுள்ளது.

சிறைச்சாலைகள் துறை அமைச்சர் டி எம் சுவாமிநாதன் இதனைத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 10 நாட்களுக்குள் இது கொள்வனவு செய்யப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் களுத்துறை சிறைச்சாலை பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

பாதாள உலக குழுத் தலைவர் சமயங் உள்ளிட்ட ஏழு பேர் இதில் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்தை அடுத்தே கேகாலை சிறைச்சாலைக்கு பேருந்து கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.