டென்மார்க் மகளிர் அமைப்பு நடாத்திய 2ம் லெப். மாலதியின் வணக்க நிகழ்வும் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும்

212 0

மானம் பெரிதென்று வாழ்ந்த மறத்தமிழ் மரபிலே உதித்த 2ம் லெப்.மாலதி அவர்களின் 36ஆவது ஆண்டு வீரவணக்க நிகழ்வும், தமிழீழப்பெண்கள் எழுச்சி நாள் நிகழ்வும் Holbaek மற்றும் Aabenraa நகரங்களில் 14.10.2023 அன்று மிகவும் உணர்வுப்பூர்வமாக நடாத்தப்பட்டது .தமிழீழப்பெண்கள் எழுச்சி நிகழ்வானது பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பமானது. 2ம் லெப். மாலதி, கேணல் சங்கர் மற்றும் லெப்.கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் திருவுருவப்படத்திற்கு ஈகச்சுடரேற்றி மலர் வணக்கம் செலுத்தப்பட்டதை தொடந்து, மாவீரர்களுக்கு மக்கள்

சுடரேற்றி, மலர்ததூவி தங்கள் வீரவணக்கத்தை செலுத்தியதுடன், அனைத்து மாவீரர்களையும் படுகொலை செய்யப்பட்ட மக்கள் மற்றும் நாட்டுப்பற்றாளர்களையும் நினைவேந்தி அகவணக்கம் செலுத்தினர்.தொடந்து Aabenraa நகரில் நடைபெற்ற மேடை நிகழ்வில் ஓபன்ரோ மாலதி தமிழ்க் கலைக்கூட மாணவர்களின் கவிதை, நடனம், பேச்சு மற்றும் மாவீரர்களின் வீரத்தை உணர்த்தும் எழுச்சி கானங்களும் இடம்பெற்றன.

அத்தோடு தமிழீழப்பெண்கள் எழுச்சி நாளை முன்னிட்டு டென்மார்க் மகளிர் அமைப்பினரால் விடுக்கப்பட்ட அறிக்கை வாசிக்கப்பட்டதோடு சிறப்புரையும் இடம் பெற்றது. நிகழ்வின் இறுதியில் நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடலுடனும், தமிழர்களின் தாரகமந்திரமான “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற எழுச்சிக் கோசத்துடன் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.