ஆதரவளித்த நாடுகளுக்கு இலங்கை நன்றி

337 0

நலலிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை நிலைநாட்ட ஜெனிவாவில் இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்க ஆதரவளித்த நாடுகளுக்கு அரசாங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கம் நேற்று வெளியிட்ட அறிக்கையொன்றில் இதனைத் தெரிவித்துள்ளது.

2015ஆம் ஆண்டு இலங்கையினால் இணை அனுசரணை வழங்கப்பட்ட தீர்மானத்தின் கால எல்லையை மேலும் 2 ஆண்டுகளினால் நீடிப்பதன் மூலம் இலங்கையின் முன்னேற்ற பயணத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக சர்வதேச சமூகத்தினால் மிக முக்கியமான ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் தலைமைத்துவத்தின் கீழ் சர்வதேசத்தின் ஒத்துழைப்பு மற்றும் உதவிகளுடன் கூடிய செயன்முறையொன்றை ஸ்தாபிப்பதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்லிணக்கம், ஜனநாயகம் ஆகியவற்றை பலப்படுத்தி நிலையான சமாதானம் அடைவதற்கான பயணத்தில், அனைத்து நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றின் செயன்முறைகளின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.