ஒரு கிலோ ஹெரோயினுடன் பாகிஸ்தானியர் கைது

427 0

ஒரு கிலோ ஹெரோயின் போதைப்பொருளுடன் பாகிஸ்தான் நாட்டவர் ஒருவர் கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் நேற்று இரவு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட ஹெரோயினின் பெறுமதி ஒரு கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

கட்டாரிலிருந்து, பாகிஸ்தான் செல்லும் நோக்கில் அவர் குறித்த ஹெரோயினை இலங்கைக்கு கொண்டுவந்துள்ளதாக வானூர்தி நிலைய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த பாகிஸ்தான் நாட்டவர், தனது பயணப் பொதியில் மறைத்து வைத்து கொண்டு வந்த நிலையில், குறித்த ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட பாகிஸ்தான் நாட்டவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த 4 ஆம் திகதி 5 கிலோ 500 கிராம் ஹெரோயினுடன், பாகிஸ்தான் நாட்டவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.