ஜெனிவா தீர்மான அமுலாக்கத்தின் பலன்கள் – பாதிக்கப்பட்ட மக்கள் பெற்றுக்கொள்வதனை உறுதிசெய்ய வேண்டும் – த.தே.கூட்டமைப்பு

343 0

ஜெனிவா தீர்மான அமுலாக்கத்தின் பலன்கள் – பாதிக்கப்பட்ட மக்கள் பெற்றுக்கொள்வதனை உறுதிசெய்ய வேண்டும் – த.தே.கூட்டமைப்பு

ஜெனிவா தீர்மானத்தின் அமுலாக்கத்தின் பலன்களை பாதிக்கப்பட்ட மக்கள் பெற்றுக்கொள்வதனை உறுதிசெய்யப்படவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

மனித உரிமைகள் பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம் குறித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது.

காணிவிடுவிப்பு, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமற்போனோரின் குடும்பங்களின் அங்கலாய்ப்புகள், மற்றும் புதிய அரசியலமைப்பை உருவாக்குதல் போன்ற விடயங்களில் அரசாங்கம் இதயசுத்தியுடன் செயற்பட வேண்டும்.

தமிழ் மக்கள் தமது பொறுமையின் எல்லையை அடைந்துவிட்டார்கள்.

எனவே, இந்த விடயங்கள் தொடர்பிலான அவர்களது இடர்களுக்கும், வேதனைகளுக்கும் வெகு விரைவிலே ஒரு முடிவு காணப்படவேண்டும்.

இந்த விடயங்களை அடைந்துகொள்வதில் சர்வதேச சமூகத்தின் தொடர்ச்சியான பங்களிப்பையும் ஒத்தாசைகளையும் தாம் வரவேற்றபதாக கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இந்த தீர்மானத்தின் அமுலாக்கத்தின் பலன்களை பாதிக்கப்பட்ட மக்கள் பெற்றுக்கொள்வதனை உறுதிசெய்யப்படவேண்டும்.

அதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ஐக்கிய நாடுகள், மனித உரிமைகள் பேரவை மற்றும் சர்வதேச சமூகம் என்பன எடுக்கவேண்டும் என கேட்டுக் கொள்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.