வில்பத்து சரணாலய காடுகள் பாதுகாப்பு வனங்களாக பிரகடனம்

325 0

ரஷ்ய விஜயத்தில் ஈடுபட்டுள்ள ஜனாதிபதி, மொஸ்கோவில் வைத்து இதற்கான வர்த்தமாணி அறிவித்தலில் நேற்று கைச்சாத்திட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன் கீழ் வில்பத்து சரணாலயத்தின் வடக்கில் அமைந்துள்ள பிரதேசம் வனப் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு உட்பட்ட மாவில்லு, வெப்பல், கரடிகுழி, மறிச்சக்கட்டி, விலச்சிக்குளம், பெரியமுறிப்பு ஆகிய வனப் பிரதேசங்களை ஒன்றிணைத்து மாவில்லு பாதுகாப்பு வனப் பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

வில்பத்து சரணாலயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய வனப் பகுதியை அழிக்கப்படுவதாக அண்மைக் காலமாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன்.

இந்த நிலையிலேயே, குறித்த வனப் பகுதிகள் பாதுகாப்பு வனங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.