தடைசெய்யப்பட்ட செயற்திட்டங்கள் மற்றும் அதிகாரமாக்கப்படாத நிதி நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பாக பொலிஸ் அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தும் செயலமர்வு..(காணொளி)

332 0

 

தடைசெய்யப்பட்ட செயற்திட்டங்கள் மற்றும் அதிகாரமாக்கப்படாத நிதி நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பாக பொலிஸ் அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தும் செயலமர்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.

இலங்கை மத்திய வங்கியின் கிழக்குமாகான பிரதேச அலுவலகத்தினால் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களில்    தடைசெய்யப்பட்ட சட்ட விரோத செயற்பாடுகள், அதிகாரமாக்கப்படாத நிதி நிறுவனங்களின் நிதி நடவடிக்கைகள் தொடர்பில் பொலிஸ் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகள் தொடர்பாக தெளிவு படுத்தும்  செயலமர்வுகள் மாவட்ட ரீதியாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும், பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் நடாத்தப்பட்டு வருகின்றன.

இதன் கீழ் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கான ஒரு நாள் செயலமர்வு கிழக்கு மாகாண பிரதேச அலுவலக முகாமையாளர் திருமதி கார்த்திகா நிரோசன் தலைமையில்  மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக மண்டபத்தில் இன்று  நடைபெற்றது. செயலமர்வில் சிறப்பு விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர்  கே.பி.கீர்த்திரத்ன, மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், மற்றும் மாவட்ட  சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.