இலவசக் கல்வியை பாதுகாப்பதற்கான மனுவில், 25 இலட்சம் பேரிடம் கையெழுத்துபெறும் வேலைத்திட்டம்இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் இலவசக் கல்வியை பாதுகாப்பதற்கான மனுவில், 25 இலட்சம் பேரிடம் கையெழுத்துபெறும் வேலைத்திட்டம் ஒன்று இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.
வைத்தியபீட மாணவர் செயற்குழுவுடன் இணைந்து இந்த வேலைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அமைப்பாளர் லகிரு வீரசேகர தெரிவித்துள்ளார்.
மாலபே தனியார் வைத்தியக் கல்லூரியை தடைசெய்தல், பல்கலைக்கழகத்திற்கு அனுமதிப்போரை அதிகப்படுத்தல் மற்றும் பாடசாலைகளில் மேற்கொள்ளப்படும் நிதி சேகரிப்பு நடவடிக்கைகளை நிறுத்துதல் உள்ளிட்ட சில விடயங்கள் இந்த மனுவில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இதன்படி, குறித்த மனுவில் மக்களின் கையெழுத்துக்களை பெறும் நடவடிக்கை இன்று சில பிரதேசங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக லகிரு வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.

