வடக்கு மாகாண விவசாய அமைச்சினால் கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை(காணொளி)

369 0

வடக்கு மாகாண விவசாய அமைச்சினால் கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கட்டாக்காலி  மாடுகளைக் கட்டுப்படுத்தி விவசாயிகளுக்கு சிறுதானிய பயிர்செய்கையை ஊக்குவிக்கும் விதமாக உதவித்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் யாழ்ப்பாணம் சாவகச்சேரி சரசாலையில் கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்தி சிறுதானியங்களை பாதுகாக்கும் முகமாக வேலி அமைக்க 70 விவசாயிகளுக்கு முள்ளுக்கம்பிகள் வழங்கி வைக்கப்பட்டன. முள்ளுக்கம்பிகளை சாவகச்சேரி விவசாய போதனாசிரியர் ஜெயசுதா வழங்கி வைத்தார்.

சரசாலை வடக்கு நித்திலா மகளிர் சங்கத்தின் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் தென்மராட்சிப் பிரதி விவசாய பணிப்பாளர் வி.இளங்குமரன், விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள் சரசாலை வடக்கு தெற்கு விவசாய சம்மேளனத்தின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.