புதிய அரசியல் யாப்பின் ஊடாக அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை வழங்கி, அனைத்து சமூகத்திற்கும் ஏற்ற அரசியல் தீர்வொன்று முன்வைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த வலியுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
ஜெனீவா பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கியதற்கமைய நம்பகத்தன்மையான நீதிப் பொறிமுறை ஒன்று முன்வைக்கப்பட வேண்டும்.
இராணுவக் குறைப்பை மேற்கொண்டு பொதுமக்களுக்கு சொந்தமான காணிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.
பயங்கரவாத தடை சட்டத்துக்கு பதிலாக மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையிலான புதிய சட்டங்கள் அமுலாக்கப்பட வேண்டும் என்றும் கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

