ரதுபஸ்வல துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் மூன்று இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப்புலனாய்வு அதிகாரிகளால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடிநீர் கோரி ரதுபஸ்வல பிரதேசவாசிகள் 2013 ஆம் ஆண்டு வெலிவேரி நகரத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் இடையே துப்பாக்கி பிரயோகம் மற்றும் தாக்குதலில் 3 இளைஞர்கள் உயிரிழந்தனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் குறித்த இராணுவ வீரர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளுக்கு பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

