சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதை கேரள அரசு எதிர்க்கவில்லை

312 0

201607221057012072_Minister-kadakampally-surendran-Says-Kerala-government-not_SECVPFசபரிமலையில் பெண்களை அனுமதிப்பதை கேரள அரசு எதிர்க்கவில்லை என்று அறநிலையத்துறை மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் பேட்டியளித்துள்ளார்.கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் 5 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
கோவிலின் ஆச்சாரப்படி இந்த வழக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த தடையை விலக்க வேண்டும் என்றும் பெண்களை கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இதனை விசாரித்த கோர்ட்டு சபரிமலை கோவிலுக்குள் நுழைய பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது ஏன்? என்று கேள்வி எழுப்பியது. மேலும் கடவுள், ஆண்-பெண் என பாகுபாடு பார்க்காத போது மனிதர்களால் உருவாக்கப்பட்ட தடை வியப்பை அளிக்கிறது என்றும் கூறி இருந்தது. இது தொடர்பாக கேரள அரசு கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவும் அறிவுறுத்தியது.

கேரளாவில் புதிதாக பொறுப்பேற்றிருக்கும் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி கூட்டணி அரசு சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிப்பது குறித்து என்ன நிலைப்பாடு எடுத்துள்ளது? என்பது பற்றி பல்வேறு கருத்துக்கள் வெளியானது.

இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க டெல்லி சென்ற கேரள அறநிலையத்துறை மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-சபரிமலை கோவில் தொடர்பான வழக்கில், அந்த கோவிலுக்குள் பெண்களை அனுமதிப்பதற்கு ஆதரவாக சுப்ரீம் கோர்ட்டில் இடதுசாரி கூட்டணி அரசு கடந்த 2007-ம் ஆண்டு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு.

ஆனால் அதன்பிறகு ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அரசு இந்த நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு விட்டது. ஒரு கோவிலில் நுழைவது என்பது மக்களின் கலாச்சாரம், பண்பாடு, பழக்கவழக்கம் தொடர்பான வி‌ஷயமாகும். இது தொடர்பாக மக்கள் சமூகத்துடன் விவாதிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.