ஏழை மாணவி மருத்துவ படிப்புக்கு ஜெயலலிதா ரூ. 75 ஆயிரம் உதவி

361 0

201607171154298077_Jayalalithaa-letter-to-PM-take-action-to-77-fishermen_SECVPFதஞ்சாவூர் மாவட்ட ஏழை மாணவி சாந்தினிக்கு முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவ கல்லூரி கட்டணமாக ரூ.75 ஆயிரத்தை வழங்க உத்தரவிட்டுள்ளார்.  புரட்சித்தலைவி அம்மா பெஸ்ட் சேரிடெபிள் டிரஸ்ட் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பதற்கு இடம் கிடைத்துள்ள தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி மருத்துவக் கல்லூரி சாலை, செங்கொல்லை பகுதியில் வசித்து வரும் குமரேசன் – வெள்ளையம்மாள் ஆகியோரது மகள் சாந்தினி, தனது தாயும், தந்தையும் கூலி வேலை செய்து குடும்பத்தை வழிநடத்தி வருவதாகத் தெரிவித்து, மருத்துவப் படிப்புக்கு நிதியுதவி வழங்க வேண்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதாவுக்கு கோரிக்கை வைத்திருந்தார்.

ஏழ்மை காரணமாக, உயர் கல்வி பெறுகின்ற நல்வாய்ப்பை யாரும் இழந்துவிடக் கூடாது என்ற உயரிய சிந்தனை கொண்ட அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா, மாணவி சாந்தினியின் கோரிக்கையை  பரிசீலித்தார்.

மாணவி சாந்தினியின் மருத்துவப் படிப்புக்கான முழு செலவையும் ஏற்றுக்கொண்டு, முதலாம் ஆண்டு கல்லூரிக் கட்டணம், விடுதிக் கட்டணம், புத்தகக் கட்டணம் உட்பட மொத்தம் ரூ. 75 ஆயிரம் “புரட்சித் தலைவி அம்மா பெஸ்ட் சேரிடெபிள் டிரஸ்ட்”டில் இருந்து வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.