வத்தளை ‘இமா’ விசேட அதிரடிப்படையினரால் கைது!

137 0
துபாயில் தலைமறைவாகியுள்ள கணேமுல்ல சஞ்சீவவின் சகாவான கலன என்பவரின்  உதவியாளரான இலங்கையில் போதைப்பொருள் கடத்தலை வழிநடத்தியதாகக் கூறப்படும் யுவதியை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

‘இமா’ என்ற இந்த யுவதி  வத்தளை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் எனவும் அவரிடமிருந்து 5 கிராம் 490 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகவும்  விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

ராகம பொலிஸ் பிரிவு, குருகுலாவ, ராகம பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை (04) விசேட பொலிஸ் குழுவொன்று சுற்றிவளைப்பை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.