கந்தானையில் மீன் வர்த்தகரின் வீட்டின் மீது துப்பாக்கிப் பிரயோகம்!

140 0

கந்தானை பொலிஸ்  பிரிவுக்கு உட்பட்ட பகுதியில்  மீன் வர்த்தகர்  ஒருவரின் வீட்டின் மீது இன்று வியாழக்கிழமை (05)  காலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன்  வர்த்தகர்  வீட்டிலிருந்தபோதே மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் வீட்டின் ஜன்னல் சேதமடைந்துள்ளதுடன், எவருக்கும் காயமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை.

சம்பவம் தொடர்பில் கந்தானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.