தேர்தலை நடத்தாமை மனித உரிமை மீறலாகும்: நிமால் புஞ்சிஹேவா

181 0

தேர்தலை நடத்தாமை மனித உரிமையை மீறும் ஒரு செயற்பாடாகும் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமால் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்படாமை மனித உரிமை மீறலாகவே கருதப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹட்டனில் இன்றைய தினம்(29.09.2023) நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்குபற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.மேலும், ”தற்பொழுது கால வரையறையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ள மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டிருந்தால் மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டிருப்பார்கள்.

எனினும், இது வரையில் தேர்தலை நடாத்தாமை மனித உரிமை மீறலாகவே கருதப்படும்.

இந்நிலையில், சமூக ஊடகங்ளை ஒழுங்குபடுத்தும் போர்வையில் கருத்துச் சுதந்திரம் முடக்கப்படுமானால் அதற்கு எதிராக குரல் கொடுக்க நேரிடும்.”  என நிமால் புஞ்சிஹேவா சுட்டிக்காட்டியுள்ளார்.