இலங்கை மக்கள் தொகையில் ஒரு லட்சத்துக்கு 65 பேர் காச நோயாளர்களாக உள்ளதாக உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள புதிய சர்வதேச அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதன்படி, இலங்கையில் காச நோயாளர்கள் 13757 பேர் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இவர்களில் கடந்த வருடத்தில் 8886 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இன்னும் 4871 காச நோயாளர்கள் பொது மக்களில் அடையாளம் காணப்படாதுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
இந்த அடையாளம் காணப்படாதவர்களினால், சமூகத்துக்குள் காச நோய் அமைதியான முறையில் பரப்பப்பட்டு வருவதாகவும் தேசிய காச நோய் தடுப்பு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது

