இலங்கை ஜனாதிபதி ரஷ்யா பயணமானார்.

230 0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை ரஷ்யாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

இந்தநிலையில் எதிர்வரும் 24ஆம் திகதி வரையில் அவர் ரஷ்யாவில் தங்கி இருப்பார்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் அழைப்பின் பேரில் அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

அத்துடன் 23ஆம் திகதி புட்டினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்திப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான பல்வேறு உடன்படிக்கைகள் கைச்சாத்தகவுள்ளன.

1974ஆம் ஆண்டுக்கு பின்னர் இலங்கையின் அரசியல் தலைவர் ஒருவர் ரஷ்யாவுக்கு விஜயம் செய்யும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

இறுதியாக முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க ரஷ்யாவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான 60 வருட ராஜதந்திர உறவுகளின் பூர்த்தியை முன்னிட்டு இந்த விஜயம் அமையவுள்ளது.