பீடாதிபதி பரமானந்தம் கலாநிதி பட்டம் பெற்றார்!

152 0

யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரிப் பீடாதிபதி திரு.சு.பரமானந்தம் கொழும்பு பல்கலைக் கழகத்தில் ‘கற்றல் கற்பித்தலில் தொழில்நுட்ப வளங்களை ஒருங்கிணைத்தல்” எனும் பொருளில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டத்தினை பெற்றுள்ளார்.

அவர் தனது ஆரம்பக் கல்வியை வஃமுதலியார் குளம் றோ.க.த.க.பாடசாலையிலும், இடைநிலைக்கல்வியை வ/செட்டிக்குளம் மகாவித்தியாலயத்திலும் க.பொ.த உயர்தரத்தை வ/தமிழ் ம.வி யிலும் கற்ற இவர் ஆரம்பத்தில் கணித விஞ்ஞான ஆசிரியராக கடமையை ஆரம்பித்து இன்று இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவை தரம் ஒன்றில் பீடாதிபதியாக யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் கடமையாற்றுகின்றார்.

பட்டப் படிப்பை பேராதெனிய பல்கலைக் கழகத்திலும் முதுகல்வி விஞ்ஞானமாணிப் பட்டத்தினை வட அயர்லாந்து அல்ஸ்ரா பல்கலைக் கழகத்திலும், லண்டன் ஒக்ஸ்போட் பல்கலைக் கழகத்தில் கணனி கற்பித்தலில் சான்றிதழையும் பெற்றுள்ளார்.

பல கல்வியியல் சார்ந்த கட்டுரைகளையும், நூல்களையும் வெளியிட்ட அதேவேளை கல்வியில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம், கட்டுருவாக்கவாதம் மற்றும் கல்வித்தொழில்நுட்பம் போன்ற நூல்கள் ஆசிரிய கல்வியில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.