பீஹாரில் படகு விபத்து – 18 மாணவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

187 0

இந்தியாவின் பீஹாரில் பாடசாலை மாணவர்கள் பயணம் செய்துகொண்டிருந்த படகு கவிழ்ந்ததில் 18 மாணவர்கள் காணாமல்போயுள்ளனர்.

பீஹாரின் முஜாபர்பூர் மாவட்டத்தில்பக்மதி ஆற்றில்  இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விபத்து இடம்பெற்ற பகுதிகளிற்குஅதிகாரிகள் அனுப்பப்பட்டுள்ளனர் என முதலமைச்சர் நிதீஸ் குமார் தெரிவித்துள்ளார்.

மீட்பு நடவடிக்கைகள் இடம்பெறுவதாக  அவர் தெரிவித்துள்ளார்.