பேரழிவை ஏற்படுத்தியுள்ள லிபியாவின்புயல் வெள்ளத்தில் 20இ000பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியாகியுள்ளது.
கிழக்கு லிபியாவின் துறைமுகநகரான டெமாவின் மேயர் 18000 முதல் 20000 பேர்வரை புயல்வெள்ளத்தினால் உயிரிழந்திருக்கலாம் என தெரிவித்துள்ளார்.
அணைக்கட்டு தகர்ந்ததால் இரண்டு மாவட்டங்கள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதை அடிப்படையாக வைத்து இந்த கணிப்பீடுகளை மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை 5000 பேர் உயிரிழந்தை உறுதியாகியுள்து பத்தாயிரம் பேர் காணாமல்போயுள்ளனர்.
வீதிகள் பெரு வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டன கடலில் இருந்து உடல்கள் மீட்கப்படுகின்றன.
எகிப்து இத்தாலி ஸ்பெயின் உட்பட பல நாடுகளில் இருந்தும் மீட்புகுழுக்கள் லிபியா விரைந்துள்ளன.

