சுகாதார அமைச்சர் உள்ளிட்ட 3 பேரை பதவிநீக்குமாறு கோரி சத்தியாக்கிரக போராட்டம்

134 0

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல உட்பட மூன்று பேரை அவர்களின் பதவியில் இருந்து நீக்குமாறு கோரி தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் ஒன்றியம் புதன்கிழமை (13) முதல் தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.

அதன் பிரகாரம் புதன்கிழமை (13) காலை 9மணிக்கு சுகாதார அமைச்சுக்கு முன்னால் சத்தியாக்கிரக போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

சுகாதார துறையில் இடம்பெறும் மோசமான கொடுக்கல் வாங்கல், மோசடிகள், பெறுகை கோரல் செயற்பாடுகள் இடம்பெறாமல் இருப்பது, சுகாதார அமைச்சு உட்பட எந்த அதிகாரிகளும் தற்போது இடம்பெறும் பிரச்சினைகள் தொடர்பில் உணர்வற்று இருப்பது.

மருந்து பொருட்களுக்கான தட்டுப்பாடு, தரமற்ற மருந்து பொருட்களை பயன்படுத்தியதன் மூலம் நோய்க்குள்ளான மக்கள் மரணிப்பது.

மருந்து விலை கட்டுப்பாட்டுக்கு செல்லாமல் இருப்பது உட்பட பல பிரச்சினைகளுக்கு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, அமைச்சின் செயலாளர் மற்றும் சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் ஆகியோரே பொறுப்புக்கூற வேண்டும்.

அதனால் இவர்கள் 3 பேரையும் அவர்களின் பதவிகளில் இருந்து நீக்க வேண்டும் என தெரிவித்தே தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் ஒன்றியம் தொடர் சத்தியாகிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் கமன்த்த ராேஷான் தெரிவித்தார்.