உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணை – சிறிசேன வேண்டுகோள்

128 0

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்று இதனை தெரிவித்துள்ள அவர் கடந்த நான்கு வருடங்களாக பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் எனக்கு எதிராக பல குற்றசாட்டுகள் முன்வைக்கப்பட்டன என தெரிவித்துள்ள அவர்இந்த தாக்குதலிற்கு யார் காரணம் என்பது குறித்து சனல் 4 ஆவணப்படம் வேறு தகவல்களை வெளியிட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது போல நாங்களும் எங்கள் குரல்களை எழுப்பி சர்வதேச விசாரணைக்கு அழைப்பு விடுக்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.