காணாமல் போன தமது உறவுகள் இறந்துவிட்டதாக கூறுவதை ஏற்று கொள்ள மறுக்கின்றனர் – கோட்டபய

263 0
காணாமல் போனதாக கூறும் தமது உறவுகள் போரில் இறந்து விட்டதாக கூறினாலும், அவர்களது உறவினர்கள் அதனை ஏற்க மறுப்பதாக கோட்டபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, தாம் பதவியில் இருந்த போது கோட்டாய ராஜபக்ஷவை சந்தித்த வேளையிலேயே அவர் அதனை தெரிவித்ததாக நவநீதம்பிள்ளை குறிப்பிட்டுள்ளார்.
ஆங்கில ஊடம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
காணாமல் போனோர் தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என தாம் கோட்டாபயவிடம் வலியுறுத்தியதாக நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்
எனினும் சிங்கள மக்களும் காணாமல் போன தமது உறவுகள் இறந்துவிட்டதாக கூறுவதை ஏற்று கொள்ள மறுப்பதாக கோட்டபாய ராஜபக்ஷ சுட்டிக்காட்டியிருந்தார்.
அதேவேளை, வடக்கின் பின்தங்கிய பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு இலங்கையின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் யார் என்பது கூட தெரியாது.
அவ்வாறான நிலையில், இராணுவ அதிகாரிகளின் பெயர்களை குறிப்பிட்டு, தமது பிள்ளைகள் போரின் போது அவர்களிடம் சரணடைந்தமையை எவ்வாறு, அந்த மக்கள் உறுதிப்படுத்தமுடியும் எனவும் கோட்டாபய தம்மிடம் கேள்வி எழுப்பியதாக நவநீதம்பிள்ளை தெரிவித்தார்.