இம்மாதம் 21ஆம் திகதி முதல் 2024.01.21 வரையான 4 மாதகாலத்திற்கு ஒக்டேன் 92 வகை பெற்றோல் கப்பல்கள் 4 இனைக் முற்பதிவு செய்வதற்காக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் பதிவு செய்யப்பட்ட விநியோகத்தர்களிடம் நீண்டகால ஒப்பந்தத்திற்காக விலைமனுவைக் கோரியுள்ளது.
அதற்காக 04 கம்பனிகள் விலைமனுக்களை சமர்ப்பித்துள்ளன. அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள விசேட நிரந்தரப் பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய குறித்த பெறுகையை சிங்கப்பூர் விடோல் ஏசியா கம்பனிக்கு வழங்குவதற்காக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

