சர்வதேச கடல்சார் அமைப்புக்கான இலங்கையின் முதல் நிரந்தரப் பிரதிநிதியாக சரோஜா சிறிசேன

134 0

சர்வதேச கடல்சார் அமைப்புக்கான  ( IMO) இலங்கையின் முதல் நிரந்தரப் பிரதிநிதிக்கான நற்சான்றிதழை இங்கிலாந்திற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேன சர்வதேச கடல்சார் அமைப்பின் (IMO) பொதுச் செயலாளர் கிடாக் லிம்மிடம் கையளித்தார்.

செப்டம்பர் 08 ஆம் திகதி உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேன தனது நற்சான்றிதழ்களை  சமர்ப்பித்ததாக உயர்ஸ்தானிகராலயம் ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு ஒக்டோபரில் இந்தியப் பெருங்கடல் ரிம் சங்கத்தின் (IORA) தலைமைப் பதவியை இலங்கை ஏற்கவிருக்கும் நேரத்தில் சர்வதேச கடல்சார் அமைப்புக்கான  அங்கீகாரம் இலங்கைக்கு கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.