வனப்பகுதியொன்றில் புதையல் தோண்டிய நால்வர் மொரகொட பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்கள் 23, 43, 52 மற்றும் 55 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
மடவளை, நாமல்புர பகுதியில் உள்ள வனப்பகுதிக்குள் புதையல் தோண்டும் போதே குறித்த நால்வரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்களிடமிருந்து புதையல் தோண்ட பயன்படுத்தும் கருவிகள் உள்ளிட்ட பொருட்கள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

