சர்வதேச நாணய நிதியத்தின் ஒதுக்கீட்டு வளங்கள் அதிகரிக்கப்பட வேண்டும்!

126 0

2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்தின் ஒதுக்கீட்டு வளங்களை அதிகரிப்பது இன்றியமையாதது என அதன் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா தெரிவித்துள்ளார்.
ஜி20 மாநாட்டின் உறுப்பினர்களை காலநிலை மாற்றத்துக்காக, வருடாந்தம் 100 பில்லியன் டொலர்கள் ஒதுக்கீடு செய்யுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
புது டில்லியில் நடந்த அதன் உச்சிமாநாட்டில், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் கடன் பாதிப்புகளை திறமையான, விரிவான மற்றும் உரிய முறையில் முகாமைத்துவம் செய்வதற்கு வழிவகுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் ‘பல்தரப்பு வளர்ச்சி வங்கிகளை வலுப்படுத்துவதன் ஊடாக ஆதரிக்கப்படும் காலநிலை மாற்றத்துக்காக வருடாந்தம் 100 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியை வழங்குவதில், ஜி20 நாடுகளின் உறுப்பினர்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என அவர் வலியுத்தியுள்ளார்.
வரி சீர்திருத்தங்கள், முறையான பொதுச் செலவுகள், நிதி நிறுவனங்கள் மற்றும் கடன் சந்தைகள் மூலம் பசுமை மாற்றத்திற்கு நிதியளிப்பதற்கும் நிர்வகிப்பதற்கும் உள்நாட்டு வளங்களை நாடுகள் திரட்ட வேண்டும்.
இந்நிலையில், உலகப் பொருளாதாரத்தை வலுவாகவும், மீள்தன்மையுடனும் மாற்றுவதற்கு, ஆண்டு இறுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்தின் ஒதுக்கீட்டு வளங்களை அதிகரிப்பதற்கான ஒப்பந்தத்தை எட்டுவது இன்றியமையாதது என அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், வர்த்தகம் வளர்ச்சியின் இயந்திரமாக இருக்க வேண்டும் என்றால், நாம் வாழ்வாதாரங்களையும் வாய்ப்புகளையும் உருவாக்க வேண்டும் என சர்வதே நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜீயேவா வலியுறுத்தியுள்ளார்.
அந்த வகையில், ஒருங்கிணைந்த பொருளாதாரத்தின் உணர்வில் அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.