மோட்டார் சைக்கிள் விபத்தில் கணவனும், மனைவியும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் அம்பாந்தோட்டை, வீரகெட்டிய பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.
கடந்த வாரம் திருமணம் முடித்த இருவரும் மோட்டார் சைக்கிளில் உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோதே விபத்தில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதிக்கு அருகில் இருந்த மரமொன்றுடன் மோதியதில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற 31 வயதுடைய கணவன் சம்பவ இடத்திலும், பின் ஆசனத்தில் அமர்ந்து சென்ற 28 வயதுடைய மனைவி வைத்தியசாலையிலும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இருவரும் வீரகெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருமணம் முடிந்து ஒரு வாரமே ஆன நிலையில் புதுமணத் தம்பதியினர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பிரதேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஆசிரியர் தலையங்கம்
-
இலங்கையில் பயங்கரவாதத் தடைச்சட்டமும் புதிய சட்டத்தின் ஆபத்துகளும்!
February 15, 2026 -
“அரிசி பொங்கலா? அரசியல் பொங்கலா?”
January 14, 2026
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டு
January 16, 2026 -
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
அமெரிக்க நடவடிக்கையை வெனிசுலா மக்கள் பலரும் கொண்டாடுவது ஏன்?
January 7, 2026 -
தென்னிலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரணில்
December 18, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
சுவிட்சர்லாந்தில் நடக்கவிருக்கும் எதிர்வரும் நிகழ்வுகள்-2026
February 20, 2026 -
பிரான்சில் வன்னிமயில் 2026.
February 18, 2026 -
அடிக்கற்கள் நினைவுசுமர்ந்த எழுச்சி நிகழ்வு.யேர்மனி
January 30, 2026 -
கேணல் கிட்டு அவர்களின் 33 ஆவது நினைவெழுச்சி நாள் யேர்மனி(காணொளி)
January 30, 2026 -
தமிழாலயங்களின் கலைத்திறன் போட்டி 2026- யேர்மனி
January 27, 2026 -
எழுச்சிகுயில் 2026 – சுவிஸ்
January 5, 2026

