சனல் – 4 காணொளியில் வெளியிடப்பட்ட விடயங்கள் தொடர்பில் பாராளுமன்ற விவாதம் நடத்தவேண்டும்

125 0

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் சம்பவம்  தொடர்பாக சனல் -4 காணொளியில் வெளியிடப்பட்ட விடயங்கள் தொடர்பில் சபையில் 3 நாட்களுக்கு விவாதம் நடத்தப்பட வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (08) எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவும்  எம்.பி.யுமான லக்ஷ்மன்  கிரியெல்ல, ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் சம்பவம்  தொடர்பாக சனல் -4 காணொளியில் வெளியிடப்பட்ட விடயங்கள் தொடர்பில் சபையில் 3 நாட்களுக்கு விவாதம் நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தினார்.

அத்துடன் ஸ்ரீலங்கா முஸ்லிம்  காங்கிரஸ் தலைவர்  ரவூப் ஹீக்கீமும் தனது உரையின் இறுதியில் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தற்போது வெளிவந்திருக்கும் காணொளி தொடர்பில் பாராளுமன்ற விவாதம் நடத்தப்பட வேண்டும் என கோரிக்கைகை விடுத்தார்.

இவ்வாறு 3 நாட்களுக்கு விவாதம் நடத்தப்படும் போது இன்னும் பல விடயங்களை ஆதாரங்களுடன் வெளிப்படுத்த முடியும்.

இந்தக்கோரிக்கை தொடர்பில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பதிலளிக்கையில்,  உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம்  தொடர்பாக சனல்-4 காணொளியில் வெளியிடப்பட்ட விடயங்கள் தொடர்பில் சபையில் 3 நாட்களுக்கு விவாதம் நடத்துவது தொடர்பில் அடுத்த கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் பேசித் தீர்மானிப்போம் என்றார்.