துப்பாக்கிய தயாரித்த நபர் சிக்கினார்

61 0

முல்லைத்தீவு பொலிஸ் புலனாய்வாளர்களால் கேப்பாபிலவு சூரிபுரம் பகுதியில் சட்டவிரோத நாட்டு துப்பாக்கி தயாரித்துக்கொண்டிருந்த நபர் ஒருவரை கடந்த 4ஆம் திகதி கைது செய்துள்ளார்கள்.

சூரிபுரம் பகுதியில் வீடு ஒன்றில் சட்டவிரோத நாட்டு துப்பாக்கி தயாரிக்கப்பட்டு வருவதாக கிடைக்கப்பபெற்ற தகவலுக்கு அமைய அங்கு சென்ற பொலிஸ் புலனாய்வாளர்கள்,

சட்டவிரோத துப்பாக்கியினை தயாரித்துக்கொண்டிருந்த புதுக்குடியிருப்பு பகுதியினை சேர்ந்த 36 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரை கைது செய்துள்ளதுடன், அவரிடம் இருந்து சட்டவிரோதமாக தயாரிக்கப்பபட்ட துப்பாக்கிகளின் உதிரிபாகங்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட நபரையும் சான்று பொருட்களையும் முள்ளியவளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளையும் சட்ட நடவடிக்கைகளையும் முள்ளியவளை பொலிஸ் மேற்கொண்டு வருகின்றார்கள்.