கடலுக்குச் செல்ல வேண்டாம் – மீனவர்களுக்கு எச்சரிக்கை

127 0

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை எதிர்வரும் புதன்கிழமை (6) வரை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அத்துடன் மேல், தெற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் ஆகிய மாகாணங்களில் இன்று பலத்த காற்றுடன் அதிக மழைவீழ்ச்சி பதிவாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

களுத்துறை, காலி, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு மஞ்சள் மற்றும் செம்மஞ்சள் நிறத்தினாலான மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மண்சரிவு அனர்த்தம் இடம்பெறும் சாத்தியம் உள்ள பகுதிகளில் இருப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொதுமக்களிடம் வலியுறுத்தியுள்ளது.

திருகோணமலை தொடக்கம் காங்கேசன்துறை, புத்தளம், கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடல் பிரதேசத்தில் காற்றின் வேகம் அதிகமாக காணப்படுவதால் இப்பிரதேசங்களில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதையும், கடலுக்கு செல்வதையும் தவிர்த்துக்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மீனவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

கொழும்பில் அதிக மழைவீழ்ச்சி

நாட்டில் கடந்த ஒன்றரை மாதமான நிலவிய கடும் வறட்சியான காலநிலைக்கு மத்தியில் கொழும்பு உட்பட பெரும்பாலான பகுதிகளில் பலத்த காற்றுடனான மழைவீழ்ச்சி பதிவானது.

கொழும்பு மாவட்டத்தில் 77 மில்லி லீற்றருக்கும் அதிகளவில் பதிவான மழை வீழ்ச்சியினால் மருதானை, புறக்கோட்டை, தெமட்டகொட, ஆமர் வீதி உள்ளிட்ட பெரும்பாலான சிறு நகர்ப்பகுதிகளின் வீதிகள் நீரில் மூழ்கின.

மழையுடனான காலநிலை தொடரும்

மேல், சம்பரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்று அவ்வப்போது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் காலி மாத்தறை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

எதிர்வரும் புதன்கிழமை (06) வரை மழையுடனான காலநிலை தொடரும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

மண்சரிவு அபாய எச்சரிக்கை

மழையுடனான காலநிலை நீடிக்கும் நிலையில்  காலி, களுத்துறை, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மஞ்சள் மற்றும் செம்மஞ்சள் நிலையிலான மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

காலி, களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் ஒருசில பகுதிகளுக்கு மஞ்சள் மற்றும் செம்மஞ்சள் நிறத்திலான மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மண்சரிவு எச்சரிக்கை காலப்பகுதியில் நிலத்தில் வெடிப்பு உருவாகுதல், ஆழமாகும் வெடிப்புகள் மற்றும் தரை உள்ளிறங்கள், மரங்கள், மின் கம்பங்கள், கட்டடங்கள் சாய்வடைதல், சாய்வுகளில் அமைந்துள்ள கட்டடங்கள் தரை மற்றும் சுவர்களில் வெடிப்புகள் உருவாகுதல், நிலத்திலிருந்து திடீரென நீரூற்றுக்கள், சேற்று நீர் தோன்றுதல் என்பன குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு பொதுக்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கடலுக்கு செல்ல வேண்டாம் – மீனவர்களுக்கு எச்சரிக்கை

திருகோணமலை தொடக்கம் காங்கேசன்துறை, புத்தளம், கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பிரதேசத்தில் காற்றின் வேகம் அதிகமாக காணப்படுவதால் இப்பிரதேசங்களில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதையும், கடலுக்கு செல்வதையும் தவிர்த்துக்கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் மீனவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.