புகைபிடிக்கும் பழக்கம் காரணமாக நோய் தாக்கத்திற்கு உள்ளான ஒருவருக்கு அரசாங்கம் வருடம் ஒன்றிற்கு செலவிடும் நிதியினை சேமித்தால், நாட்டில் உள்ள அனைத்து மாகாணங்களையும் அபிவிருத்தி செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
நிட்டம்புவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
சகல தொற்று நோய்களை தடுப்பதற்காக அரசாங்கம் முழு அளவில் செயல்படுகிறது.
எனினும், தொற்றா நோய்களாலும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன எனவும் சுகாதார அமைச்சர் குறிப்பிட்டார்.

