ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று பிற்பகல் மல்வத்து, அஸ்கிரி மகா நாயக்க மற்றும் அனுநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றார்.
முதலில் மல்வத்து மகாவிகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, மல்வத்து பீடத்தின் மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரைச் சந்தித்து நலம் விசாரித்ததுடன், கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.
அதனையடுத்து தேரர், பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதிக்கு ஆசி வழங்கினார்.
இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மல்வத்து பீடத்தின் அனுநாயக்க திம்புல்கும்புரே ஸ்ரீ விமலதம்ம தேரரையும் சந்தித்து கலந்துரையாடினார்.
அதன் பின்னர் அஸ்கிரி மகா விகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, அஸ்கிரி பீடத்தின் மகாநாயக்கர் வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரரைச் சந்தித்து ஆசிர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்.
வரலாற்று சிறப்புமிக்க மகியங்கனை ரஜமகா விகாரையின் பொறுப்பாளர் கலாநிதி முருந்தெனியே ஸ்ரீ தம்மரத்தன நாயக்க தேரரும் குறித்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தார்.
அதனையடுத்து ஜனாதிபதி, அஸ்கிரிய பீடத்தின் அநுநாயக்க தேரர்களான ஆணமடுவே தம்மதிஸ்ஸி தேரர் மற்றும் வெடருவே உபாலி தேரர் ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடினார்.
முன்னாள் அமைச்சர் மலிக் சமரவிக்ரம, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் கமல் புஷ்பகுமார ஆகியோரும் இச் சந்திப்புக்களில் கலந்துகொண்டனர்.
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025

