விடுவிக்கப்பட்ட இலங்கையர்கள் நாடுதிரும்பும் திகதி இன்னும் உறுதியாகவில்லை

314 0

சோமாலிய கடற்கொள்ளையர்களிடமிருந்து மீட்கப்பட்ட ஆரிஸ் 13 ரக எண்ணெய் கப்பல் இலங்கை பணியாளர்களுடன் இன்றைய தினம் சோமாலியாவின் பொஸாஸோ துறைமுகத்திற்கு உள்ளே செல்லவுள்ளது.

இந்தநிலையில், தாங்கள் எப்போது இலங்கைக்கு திரும்புவோம் என்பது குறித்து இன்னும் சரியாக கூறமுடியாதுள்ளதாக கப்பலின் பிரதான தொழிநுட்பவியலாளர் ஜயந்த களுபோவில தெரிவித்துள்ளார்.

அங்குள்ள தற்போதைய நிலைக்குறித்தும் அவர் கருத்துத் தெரிவித்தார்.

நேற்று இடம்பெறவிருந்த சர்வதேச ஊடகம் சந்திப்பு இன்று வரையில் பிற்போடப்பட்டுள்ளது.

போக்குவரத்து பிரச்சினை காரணமாக சர்வதேச ஊடகவியலாளர்களுக்கு பங்குகொள்ள முடியாமை காரணமாகவே இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இன்றைய தினம் துறைமுகத்திற்குள் செல்ல உள்ளோம்.

ஒரு பிரச்சினையும் இல்லை.

எனினும் எப்போது நாடு திரும்புவோம் என்பது குறித்து இன்னும் உறுதியாக கூறமுடியாதுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.