கடந்த யுத்த காலத்தின் போது நாட்டில் மனித உரிமைகள் மீறப்பட்டிருக்குமானால் இது குறித்து விசாரணை மேற்கொண்டு, உள்நாட்டு நீதிமன்ற சட்டங்களுக்கு அமைய மாத்திரமே தண்டனை வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜே.வி.பி இதனை தெரிவித்துள்ளது.
வவுனியாவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து ஜே.வி.பியின் பிரதான செயலாளர் டில்வின் சில்வா இதனை குறிப்பிட்டார்.
இந்த அரசாங்கத்தில் ஒன்றுமை இல்லை.
வலது கை செய்வது இடது கைக்கு தெரியாத நிலையே உள்ளது.
இலங்கைக்கு தற்போது அவசியமற்ற பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
மஹிந்தவின் அரசாங்கத்தின் காலத்தில் இது தொடர்பில் அசமந்தமாக இருந்தமையே அதற்கு காரணம்.
இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை வேண்டும் என சர்வதேசம் கோருகின்றது.
எவ்வாறாயினும், தவறு செய்தவர்களுக்கு தண்டனை அவசியம்.
எனினும் அது உள்நாட்டு விதிமுறைகளுக்கு அமையவே மேற்கொள்ளப்பட வேண்டும்.
இலங்கையின் உள்ளக பிரச்சினைக்கு சர்வதேசம் தலையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
இதுவே ஜே.வி.பியின் நிலைப்பாடு எனவும் டில்வின் சில்வா குறிப்பிட்டார்.

