விபத்து – மூன்று பேர் பலி

336 0

மொரட்டுவ – ஏகொட உயன பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 3 பேர் பலியாகினர்.

பேருந்து ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் மோதிக்கொண்டமையையடுத்து, பாரவூர்தியானது வீதியை விட்டு விலகி அருகில் இருந்த பேருந்து நிறுத்தும் தளத்தில் மோதியுள்ளது.

இதன்போது அங்கிருந்த 3 பேரே சம்பவத்தில் உயிரிழந்ததாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் இருந்து அளுத்கமை நோக்கி பயணித்த பேருந்தே இவ்வாறு பாரவூர்தியுடன் மோதியுள்ளது.