காடழிப்புக்கு பிரதானமாக பொறுப்புக் கூற வேண்டியவர்கள் அரசியல்வாதிகள் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க தெரிவித்துள்ளார்.
எம்பிலிபிட்டியவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபை நீர் வளங்கள் தொடர்பில் அண்மையில் ஆய்வொன்றை நடத்தியது.
இதில் 2050 ஆம ஆண்டு ஆகின்ற போது நீர் வளங்கள் இல்லாது போகும் நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்த பட்டி இலங்கை கடும் சிவப்பு நிறத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் இலங்கை 2050ஆம் ஆண்டில் பாரிய நீர் பற்றாகுறைக்கு முகம் கொடுக்கும் என்பதை இது எடுத்து காட்டுவதாக சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க தெரிவித்துள்ளார்.

