இந்தியாவில் இடம்பெற்ற உத்திரபிரதேஷ் மாநில தேர்தலுக்காக கட்சிகள் சுமார் 5 ஆயிரத்து 500 கோடி இந்திய ரூபாய்களை செலவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்திய தேர்தல் கண்காணிப்பு நிறுவனம் ஒன்றை மேற்கொள்காட்டி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
வாக்குகளை பெறுவதற்காக மக்களுக்கு பணம் பகிர்வதற்கு மாத்திரம் ஒரு கட்சி சராசரியாக 1000 கோடி இந்திய ரூபாவை செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, தேர்தலில் வாக்களிக்க சராசரியாக 3 இல் ஒரு வாக்காளர் பணம் அல்லது மதுபானத்தை பெற்று கொண்டுள்ளதாக ஆய்வொன்றின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
தேர்தல் பிரசாரம் ஒன்றிற்காக சராசரியாக 25 லட்சம் இந்திய ரூபாய்கள் மாத்திரமே கட்சி ஒன்றினால் செலவிட முடியும் என தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

