இலங்கையர்களுக்கு கட்டாரில் சிறைத்தண்டனை

360 0

சட்டவிரோதமாக போதைப்பொருள் வைத்திருந்தமை மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட மூன்று இலங்கையர்களுக்கு கட்டார் நீதிமன்றம் சிறைத் தண்டனையுடன் அபராதமும் விதித்துள்ளது.

முக்கிய பிரதிவாதியான ஒருவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 83 லட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஏனைய இருவருக்கும் ஒரு வருட சிறைத் தண்டணையும், தலா 4 லட்சம் ரூபா அபராதமும் விதித்து கட்டார் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கைதுசெய்யப்பட்டவர்களிடம் ரத்த சோதனை மேற்கொண்ட போது, அவர்கள் போதைப் பொருள் பயன்படுத்தியுள்ளர் என்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.